--> <$BlogRSDUrl$>

Thursday, April 08, 2004

ஒரு மொழி பேசிவிடு 

ஓரு முறை
ஒரு மொழி பேசிவிடு
மௌனச்சிறை உடைத்து
என் மனதோடாவது பேசிவிடு

ஓசையின்றி ஓயாமல் பேசிவிடு
உன் ஓரக்கண்பார்வையால்
என் உள்ளத்துடன் பேசிவிடு
மலையென என் காதல்
அலையென துள்ளும்போதும்
உன் மௌனம் என்னை
கரையோடு மோதி
நுரையாகித்தொலையு முன்னே
ஓரு முறை பேசி விடு – அன்பே
ஓர் அசைவாவது காட்டிவிடு

காத்திருந்த காலங்கள்
கனவாகி கரையமுன்னே
என் கண்ணீர் வீழ்ந்து
கடலோடு கலக்கமுன்னே
ஓர்; மொழி பேசிவிடு – உன்
மனதினை திறந்துவிடு

சில்மிசங்களால் என்னை சீண்டியநாட்கள்
உன் சின்னக்கரங்களால் நீவிய குழல்
ஓசையின்றிய உன் உணர்ச்சிக்கொந்தளிப்பு
யாவும் கலைந்து போகமுன்னே
ஒர்; மொழி பேசிவிடு
எனக்காய் ஒரு தடவைபேசிவிடேன்

முதல் முத்தம் நீ தந்து
முத்தாய் அதை சேர்த்து
பல முத்தமாய் பல்கிப்பெருகிய
காதல் வீரியத்தை கண்குளிர கண்டுகொண்டே
ஓரு மொழி பேசிவிடு – அன்பே
என்னை ஏசியாவது பேசிவிடேன்Wednesday, February 11, 2004

*Feb-14th * காதலர்தினத்திற்காய் ஒர்; காதல் கவிதை * 

ஊரறிய விழிக்காமல்
உள் மனசில் உறங்கியதை - இன்று
உன் முன்னே வெளிச்சமாக்குகின்றேன்
உன் கூந்தல் அசைவினில்
கூனா இடையசைவில்
பேசத்தயங்கும் விழிக்கரையில்
பனித்துளி படர்ந்த இதழ்முனையில்
என் காதல் கண்டேன்
உன் காதல் மொழிந்தேன்

உன்னருகில் நானிருந்தால்
இனி உருவாகும் புதுவுலகம்
நிமிடங்கள் மணித்தியாலத்தினுள் புதைய
நாட்கள் வாரங்களை அடக்க
மாதங்கள் வருடங்களை குறுக்க
நாம் பல்லாண்டு பல்கிப்பெருகி
பரவசமாய் வாழ்வோம்

வர்ணங்களிற்கெல்லாம் முகவரி தந்தவள் நீ
வானவில்லிற்கு வாரிசு நீ
மலர்களின் ராணி நீ
என் மஞ்சத்தின் எஜமானி நீ
என் கற்பனைக்கு எட்டாதவள் நீ
என் கனவிலும் கருவே நீதான்

என் இதயத்தை தினம் வருடும் தென்றல் நீ
என் இளமையை குளிர்விக்கும் குளிரருவி நீ
கூந்தல் அசைவினில் ஓவியம் காட்டியவள்
கோதிய கரங்களால் அதை காவியம் ஆக்கியவள்
காலடித்தடத்தினுள் என்னை கரையச்செய்தவள்
நான் கரைந்தபோது என்னை விரைந்து அள்ளியவள்
எல்லாமே நீதானே
உனக்காக நான் வாழ
எனக்காக ஓர் காதல் செய்வாயா ?

என் உயிரெடுத்து அதை காதல் என்னும்
தறியில் நெய்து உனக்காய்
கவி எழுதி தருகின்றேன்
எனக்காய் காதல் செய்வாயா ?
எனக்காய் உன் மௌனப்புதையல் அவிழ்ப்பாயா ?
எனக்காய் ஒரு நொடி ஒரு மொழி
பகர்ந்து வைப்பாயா ?
Wednesday, January 28, 2004

நெய்தலை பாலையாக்கிவிடு 

உன் விழி விதைக்கும்
கண்ணீர் முத்து தரைசேரமுன்னம்
என் கரம் அதை ஏந்தும்
நீ அழுவதற்காக நான் காதலிக்கவில்லை
உன்னை அழகாக்கவே காதல் செய்தேன்

விழியோடு நிறைந்த நீர் இனி
வற்றிப்போகட்டும் ஆனந்தத்தில்கூட
நீ அழுதிடக்கூடாது
புூக்கள் அழுது இந்த புூமி பார்த்தில்லை
நீ அழுது இனி நான் பார்க்ககூடாது

அழுதிடத்தோன்றினால் என்னை நினை
உனக்காய் நான் அழுதுகொள்கின்றேன்
புூவிற்காய்த்தானே இந்த வானம் அழுகின்றது
உனக்காய் அழுவதால் நான் உற்சாகம் பெறுகின்றேன்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்தானே காதல்
வாழ்க்கை கசப்பின்றி இனிதே நகர்கின்றது

பனித்துளி வீழ்ந்து நிற்பதால்
மலர்கள் அழுவதாய் கற்பனை செய்யும்
கவிஞர் கூட்டம் கவி மனம் தெளியவேண்டும்
உனக்காய் நான் அழுது
உனக்காய் நான் உதிர்ந்து
விளக்கம் சொல்வேன்

தண்ணீரில் மீன்கள் அழுவதில்லை
அழுதாலும் யாரும் அறியப்போவதில்;லை
என் மனதோடு நீ வாழும்போது
நீ அழக்கூடாது உனக்காய்
நான் அழுவேன் யாரும் அறியப்போவதில்லை
கடலில் சேர்ந்த நதி எதுவென
பிரிகை பார்க்க முடியாது
என் கண்ணீரிலும் யாரும் பேதம் பார்க்கமுடியாது
அழுவது நான் உனக்காக அது
எனக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும்

இன்றுமுதல்
இம்மடல் உன் கரம் கிடைக்கும்போது
நெய்தலாய் நிற்கும் விழியை பாலையாக்கிவிடு
காரணம் எதுவாகினும் உன்
கண்ணீர் சிந்திவிடக்கூடாது
அர்த்தம் இருந்தாலும்
உன் அழும்விழி நான் காணக்கூடாது

எனக்காய் இதை செய்துகொள்
உனக்காய் நான் எதுவும் செய்வேன்


navabala@hotmail.com

Monday, January 19, 2004

எதிர்பார்ப்புடன் 

அழைத்த குரலிற்கு
அடிபணிந்தேனே என்னை
அனாதையாக்கிவிட்டாயே
அந்தபுரத்திற்கு ஆசைவைத்ததில்லை
அந்தரங்கத்திலும் குறுக்கிட்டதில்லை
உன் மனமென்னும் அரியாசனத்தில்
மலர்ப்புூவாக வீச எண்ணினேன்
நீ வீதியிலே வீசுகின்றாயே

கால்க்கொலுசாய் கலகலக்க எண்ணியவனை
கால் மிதியாக்கிவிட்டாயே
மழைக்கால குமிழிபோல
மனதினுள்ளே ஆயிரம் எண்ணங்கள்
மகரந்த துகள்போல
உள்ளமெல்லாம் பரவிச்செல்கின்றன

நிழலாய் வருவாயோ
நிஜமாய் வருவாயோ
நானறியேன் ! நீ
நீயாக வேண்டும்
எனக்கே எனக்காய் வேண்டும்

வாடிவீழ்ந்தபின்னும்
வாரியெடுததுக்கொள்வேன்
மலர்க்கூட்டத்தை – உன்னை
விட்டுவிடுவேனா ?

navabala@hotmail.com

காதல் சதிகாரி 

கடிவாளமேதுமின்றி
கட்டுக்கடங்காது பாய்கின்றது
காதல் என்னும் காளை
உள்ளத்தினுள்ளே ஓரமாய் இருந்ததை
உசுப்பு விட்டுவிட்டாய் - அது
உலகை ஆள துடிப்புடன் பாய்கிறது
ஆக்கப்பாதையை அன்னியமாக்கி
அழிவுப்பாதைக்கு பாய்கின்றது

இருட்டினுள் ஏற்றிய தீபம்
தேசத்தின் இருள் அகற்றிய
கர்வத்தில் மிளிர்வது போல்
காதலும் காட்சி தருகின்றது

நீ ஏங்கோ ஏற்ற நினைத்தாய்
அது எங்கெல்லாமோ மிளிர்கின்றது
பால்க்குடத்தினுள் பன்னீர் தெளிப்பதாய் எண்ணி
கொடும் விசத்தையல்லவா து}வியிருக்கின்றாய்
பாலெல்லாம் விசமாகி என்னை
பலியெடுக்க விரைகின்றதே

navabala@hotmail.com

Wednesday, December 24, 2003

நினைக்கத்தான் முடிகின்றது  

1997 ம் ஆண்டு A/L மாணவர்களிடையே நடைபெறும் ஓன்றுகூடல் நிகழ்வுகள் பாடசாலைக்களுக்கிடையிலும் நடைபெற்றபோது உடுப்பிட்டி மகளிர் பாடசாலைக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. எமது பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் சென்றோம். அன்றைய நிகழ்வினை நினைவுகூர்ந்து எழுதியது.

மீண்டும் கிட்டுமா
நிலாக்கூட்டத்தின் நெருங்கிய உறவு
மலர்களின் மகரந்த வருடல்
ஆஹா என்ன வரவேற்பு
என்ன உபசரிப்பு
கள்ளம் கபடமற்ற
ளெ;ளை உள்ளத்துடன்
காரிகையர் கூட்டம்
கனவினிலும் பெண்ணின் பின்போகும்
கபடகுணம் கொண்ட நாமிருவர்

அங்கு போவதா ?
எம்மால் முடியாதப்பா. . என
எல்லோரும் ஓதுங்க
இறுதியில் நாமிருவர் தெரிவாகி
கொலைக்களம் போகும் பலியாட்டைப்போல்
இதயம் மட்டுமல்ல
உடலும் படபடக்க உள் நுழைந்தோம்...

அங்கே நாம் காண்பது
கனவா நினைவா
கிள்ளிப்பார்த்து புரியவேண்டியிருந்தது
வரவேற்புகள் உபசரிப்புகள்

அவற்றிற்கு இதைவிட
அழகான வார்த்தை தமிழில்
உண்டெனில் இட்டுக்கொள்ளுங்கள்

இடியோசை எதிர்பார்த்த எமக்கு
இதமான இசை இன்பத்தை தந்தது

புன்னகைப் பன்னீரை தெளித்தபடி
புூக்களின் தலைவிகள்
இன்முகத்துடன் இனிதே வரவேற்று
அழகாய் உபசரிப்புகள் நிகழ்த்தி
வியப்பிலாழ்த்திவிட்டார்கள்

நிகழ்வுகள் தொடங்கி முடியம்வரை
நிமிடங்கள் நகர்வதை
வெறுக்கத்தான் முடிந்தது
நிறுத்த முடியவில்லை

எட்டு மணித்தியால வாழ்வில்
எண்பது வருட சந்தோசம்

விளையாட்டிலும்
படிப்பிலும் வீரதீரர்கள் என
அறிந்ததுண்டு கண்டதுமுண்டு
உடுப்பிட்டி மகளிர் என்றாலே
புயல் என்று பட்டமும் உண்டு
இன்று புயலிற்கு பின்னால் உள்ள
புன்னகையை நேரில்கண்டு
நெட்டிப்போனேன்

முன்பின் அறிமுகமில்லாது
முகம் காட்டினோம்

விடைபெறும்போது
விலைமதிப்பற்ற உள்ளங்களை
வேட்டையாடி வந்தோம்

கரவெட்டி விட்டு
உடுப்பிட்டி வந்து
உறவுகள் கிடைத்ததில்
உள்ளம் துள்ளியது

ஆதங்கம் 

எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன்

ஆலயத் திருவிழாக்கள்
பாடசாலை விளையாட்டு
பொங்கலின் களிப்புகள்
புத்தாண்டு கொண்டாட்டம்
தீபாவளி விற்பனை என
எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

அவைமட்டுமல்ல

உறவுகளின் திருமணங்கள்
உடன்பிறப்பின் சந்தோசங்கள்
ஊரவரின் மறைவுகள்
நண்பர்களின் விருந்துபசாரங்கள்
என எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

இன்றும்கூட
நாம் ஆலயம் சென்றோம்
நாம் உறவினர் வீடு சென்றோம்

அவர்கள் வந்தார்கள்
இவர்கள் வந்தார்கள் என
என் வீட்டார் கூறும்போது எனக்கு
ஆத்திரமும் பொறாமையும்
ஓருங்கே வருகின்றது

நான் மட்டும் இங்கே
அனாதையாய் வாழ்கின்றேன்

உறவினர் இல்லை
ஊரவர் இல்லை
பண்டிகை இல்லை
இது என்ன வாழ்க்கை

தமிழனாய் பிறந்து
இன்று தனியனாய் வாழ்கின்றேன்
அங்கும் இல்லை
இங்கும் இல்லை
இடையினில் வாடுகின்றேன்

அழகாக உடுத்த ஆடை உண்டு
ஆசைதீர உண்ண உணவுகள் உண்டு
கால்நீட்டி உட்கார அழகான மனை உண்டு
இத்தனை இருந்தும்
உறவுகள் இல்லாது
ஊரவர் இல்லாது
எப்படி வாழ்வது

  TThis page is powered by Blogger. Isn't yours?